மசாஜ் மையத்தில் மோசமான வேலை: மில்டனில் நடந்த சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மில்டன் பகுதியில் மசாஜ் செய்ய வந்தவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தொம்சன் வீதியில் அமைந்துள்ள மசக்குதல் நிலையம் ஒன்றில் வைத்து குறித்த நபர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதான ஸ்டினடர்பால் சிங் கில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஹால்டன், பீல் மற்றும் யோக் பிராந்தியங்களிலும் இவர் தனது சேவையை வழங்கி வந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர் மேலும் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts