உடனடியாக எரிபொருள் விலையை குறைப்பது கடினம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின்  விலை குறைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக குறைப்பது கடினமானதென, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

அரசாங்கத்தால்  அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவு நடவடிக்கையின்  பிரகாரம் இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு  முறையாக மேற்கொள்ளப்பட வேண்டுமென, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின்  செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார். சிங்கப்பூர் வர்த்தக குறியீட்டின்படி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதுடன்,   அங்கு தீர்மானிக்கப்படும் விலைக்கமைய இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும்,  அவர்  குறிப்பிட்டார். (P)


Related Posts