ரொறன்ரோ துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அடையாளம் வெளியானது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். திங்கட்கிழமை மாலை அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். பலியானவர்கள் 54 வயதான Arash Missagh, 44 வயதான Samira Yousefi என தெரியவந்துள்ளது. 

பலியானவர்கள் வணிக நிறுவனத்தின் இணை உரிமையாளர்கள் என தெரியவருகிறது. இதில் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரி மரணமடைந்த மூன்றாவது நபர் என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

46 வயதான அவரது அடையாளம் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை. ஆனாலும் துப்பாக்கிதாரி Alan Kats என தெரியவருகிறது.

Don Mills வீதியில் York Mills வீதிக்கும் Lawrence வீதிக்கு இடையில் உள்ள Mallard வீதியில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் திங்கட்கிழமை மாலை 3:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் இரதோற்சவ திருவிழா

Related Posts