இலங்கையில் கடன் கொடுக்கும் புதிய வங்கி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

 இலங்கையில்  முதன்முறையாக நடைபெற்று வரும் சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2024 (International Industry Expo 2024) இன் ஆரம்ப நிகழ்வில் நேற்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக புதிய அபிவிருத்தி வங்கியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து நாட்டின் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்களை பலப்படுத்தும் வகையில் “எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கைத்தொழில்துறையினரையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி ஊக்குவிப்பது அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். (P)

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் | Thedipaar News

Related Posts