யாரும் பார்த்திராத தேவயானி மகள்களின் புகைப்படம்! அடுத்த ஹீரோயின் ரெடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை, சரத்குமாருக்கு ஜோடியாக சூரியவம்சம், கமலுடன் தெனாலி, விஜய் உடன் ப்ரண்ட்ஸ், மம்முட்டிக்கு ஜோடியாக ஆனந்தம், விக்ரமுக்கு ஜோடியாக விண்ணுக்கும் மண்ணுக்கும் என தமிழில் உள்ள எல்லா டாப் நடிகர்களுடன் நடித்துவிட்டார். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும் போது அப்பட இயக்குனர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட குடும்பத்தை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தை கொஞ்சம் வளர நடிகை தேவயானி கோலங்கள் சீரியல் நடித்தார், அதில் வெற்றியும் கண்டார். 

சினிமாவை விட சீரியலில் தான் இவருக்கு வரவேற்பு அதிகமானது. குறிப்பாக அந்த சீரியல் ஐந்து வருடம் ஓடியது. பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுபுது அர்த்தங்கள் தொடரில் நடித்தார்.இன்று அவருக்கு பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூற தேவயானி சகோதரரும், நடிகருமான நகுல் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை பதிவிட்டு சகோதரிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.இதில் நடிகை தேவயானி மகள்கள் நன்றாக வளர்ந்து பெரிய பெண்கள் போல் காணப்படுகிறார்கள்.

Related Posts