சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த ராக்கெட் பாகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீனாவும், பிரான்சும் இணைந்து லாங் மார்ச் 2சி என்ற ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. சீனாவின் சிச்சாங் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் இந்த ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது. ராக்கெட்டில் இருந்த பூஸ்டர் எனப்படும் கருவி கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்தது. முன்னதாக பூஸ்டர் கருவி பூமியை நோக்கி வருவதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

ராக்கெட் பாகம் வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராக்கெட் பாகம் பூமியில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ இணைப்பு: https://x.com/i/status/1804934462502789355

Related Posts