திரையுலகில் ஸ்டண்ட் கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கியவர் வெங்கல் ராவ். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கும் டூப் போட்டு நடித்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள் காரணமாக ஸ்டண்ட் செய்வதில் இருந்து விலகி காமெடி நடிகராக தனது திரை பயணத்தை துவங்கினாராம். வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்த பல நகைச்சுவை காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் அடுத்தடுத்து வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இறுதிவரை சினிமாவில் குணசித்திர நடிகராக மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைத்த நடிகர் வெங்கல் ராவ் தற்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில் என் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது.
என்னால் நடக்க முடியவில்லை. பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்கள், சினிமா நடிகர்கள் எனக்கு உதவி செய்யுங்கள். மருத்துவ சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை. இதுக்கு என்னால் பேச முடியவில்லை. எனக்கு உதவி பண்ணுங்க என கேட்டு கொண்டுள்ளார். முன்னதாக நடிகர் பொன்னம்பலம் இது போல உதவி கேட்டு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு போன் செய்த உடனே மருத்துவ செலவு 40 லட்சம் ரூபாயை அவர் ஏற்றுக்கொண்டார் என குறிப்பிட்டு இருந்தார், ஆனால் தமிழ் சினிமாவில் இது போன்று யாரும் உதவ முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலில் மாஸ் காட்டும் மகாராஜா | Thedipaar News