கோவிட் காலத்தில் கனடிய மக்களுக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட 9 பில்லியன் டொலர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை எதிர் நோக்கியவர்களுக்கு கனடிய அரசாங்கம் கொடுப்பனவு தொகைகளை வழங்கியிருந்தது. சுமார் 9 மில்லியன் டாலர்கள் வரையில் சிலருக்கு கூடுதலாக கொடுப்பனவு தொகை வழங்கப்பட்டுள்ளது. 

அந்த கொடுப்பனவுகளை மீள வசூலிக்கும் முயற்சிகளில் கனடிய வருமான முகவர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் தொகை பணம் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அறவீடு செய்யும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

 எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நடவடிக்கை கடுமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கூடுதலாக நிதி செலுத்தப்பட்டவர்களில், மீள அளிப்பதற்கு ஒத்துழைக்காதவர்கள் அல்லது பதிலளிக்காதவர்களிடம் மட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts