Font size:
Print
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுவதைப் போல, ஏதேனுமொரு அரசியல் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருக்குமாயின் அது குறித்து முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் அளவிற்கு ஒரு அரசியல் கட்சியிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை.
அவ்வாறு ஒரு கட்சி, ஆயுதங்களை வழங்கியிருப்பின் அவர்களின் கொள்கைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
3 வயது குழந்தை உலக சாதனை | Thedipaar News
Related Posts