பிரேக் பிடிக்கல! ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த யாத்ரீகர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் சிலர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து காயம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனிஹாலின் நச்லானா அருகே பேருந்தின் பிரேக் பழுதானதால் ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்தனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கீழே விழுந்த பயணிகள் சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தின் பின்னால் ஓடுவதையும் காண முடிந்தது. இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராணுவத்தினருடன் இணைந்து வந்து துரித நடவடிக்கையில் இறங்கினர்.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1808182811712803085

அஜித் மனைவி மருத்துவமனையில் அனுமதி | Thedipaar News

Related Posts