ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பில் முரண்பாடு l திருத்தத்திற்கான யோசனையை சமர்பித்தார் ஜனாதிபதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு இடத்தில் 5 வருடங்கள் எனவும் மற்றொரு இடத்தில் 6 வருடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏற்பட்ட முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மதவாச்சியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். (P)

Related Posts