உத்திரபிரதேசம் மாநிலத்தில் விகாஸ் துபே என்பவர் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தூங்கி எழுந்த போது அவர் படுக்கையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் மற்றொரு பாம்பு கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை இடம் மாற்றினால் பாம்பு கடையில் இருந்து தப்பிக்கலாம் என்று கருதி உத்திர பிரதேச மாநிலத்தில் மற்றொரு பகுதியில் இருக்கும் அவருடைய அத்தை வீட்டில் அவர் தங்கி இருந்தார்.
ஆனால் அங்கும் அவரை ஒரு பாம்பு கடித்துள்ளது. இப்படி கடந்த 35 நாட்களில் ஆறு முறை பாம்பு கடித்துள்ளது. உரிய மருத்துவம் குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்பட்டதால் ஒவ்வொரு முறையும் அவர் உயிர் தப்பியுள்ளார். அது மட்டும் அல்லாமல் பாம்பு கடிக்க வருவதை தான் முன்கூட்டியே உணர்வதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தன்னை பாம்பு கடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாம்புக்கு பழி வாங்கும் குணம் இருப்பது உண்மை தான் போல!
Font size:
Print
Related Posts