பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றார் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்ற பெண் எம்.பி. அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்பாதாக எக்ஸ் தளத்தில் ஷிவானி தெரிவித்தார்.
உள்ளூர் அளவிலான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல், உள்ளூர் வணிகர்களை ஆதரித்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது போன்றவை ஷிவானி ராஜாவின் வாக்குறுதிகளாக உள்ளன. கடந்த 1994-ல் லீசெஸ்டர் நகரில் அவர் பிறந்துள்ளார்.
அவரது பெற்றோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இளநிலை பட்டம் முடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள முக்கிய அழகுசாதனப் பிராண்டுகளுடன் இணைந்து பாணியாற்றியவர். தனது குடும்பத்தின் ஹோட்டல் தொழிலையும் கவனித்து வருகிறார்.