இம்ரான் கானின் கட்சி தடை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும்.

பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க இருப்பதற்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அட்டாவுல்லா தரார், “பிடிஐ கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதிகளை அக்கட்சி பெற்றுள்ளது. அதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. வெளிநாட்டு நிதியுதவி வழக்கு, மே 9 கலவரம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இனி பாகிஸ்தானும், பிடிஐ கட்சியும் இணைந்திருக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் பிடிஐ கட்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யவுள்ளோம். மேலும், இம்ரான் கான் மற்றும் முன்னாள் அதிபர் ஆரிப் ஆல்வி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.” என்றார் (P)

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது | Thedipaar News

Related Posts