சஜித் அணியில் மூவருக்கு சிக்கல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம ஆகியோருக்கு கட்சியின் கூட்டங்கள்,நிகழ்வுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு இடமளிப்பதில்லையென ஜக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கட்சி மற்றும் கட்சித் தலைமைத்துவம் மீதான இவர்களின் விமர்சனங்கள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கட்சியையும் கட்சித் தலைமையையும் இவர்கள் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.இதனாலேயே இம்மூவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அக்கட்சியிலுள்ள பலர் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதேவேளை. ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரை பதவியில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்கிவிட்டு கட்சியின் மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினருக்கு அந்த பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா அண்மையில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைமையை விமர்சித்து உரை நிகழ்த்தியருந்தமை குறிப்பிடத்தக்கது.  (P)


Related Posts