பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன்முறையை நிறுத்துமாறும் கோரி இன்று (22) கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் கொடூர அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதனால் பங்களாதேஷ் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர்.
தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கடந்த 16ஆம் திகதி முதல் நடந்து வரும் வன்முறை போராட்டங்களில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். (P)