என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தித் சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத்தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) சிறப்புரிமைமீறல் பிரச்சினையை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய இரா..சாணக்கியன் மேலும் பேசுகையில்,
என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதை வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவொன்று கண்டுபிடித்துள்ளதாக இணையத்தள செய்தித் சேவை கடந்த 20 ஆம் திகதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியின் உண்மைதன்மைபற்றி எனக்குத்தெரியாது. ஆனால்
இந்த விடயம் தொடர்பில் நான் சபாநாயகருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
இதில் என்னை படுகொலை செய்வதற்கு சதி செய்வதாக கூறப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஏற்கெனவே எம்.பி., படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டவர் எனக்குற்றம் சாட்டப்பட்டவர். எனவே இந்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துகின்றேன் என்றார். (P)