இந்திய வரவு செலவுதிட்டம் 2025: இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய  மத்திய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024-25 வரவு செலவு திட்டத்தில் இலங்கை, 245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றில் தாக்கல் செய்தார்.

இதற்கமைய, மத்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது கடந்த ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட 150 கோடியை விட 95 கோடி ரூபாய் அதிக தொகையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூடுதல் நிதியுதவி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டின்படி, நேபாளம் 700 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட 550 கோடியிலிருந்து 150 கோடி ரூபாய் அதிகமாகும்.

 

அதே சமயம் சீசெல்ஸூம் 30கோடி ரூபாய் நிதியுதவியை பெற்றுள்ளது. எனினும் பூட்டான், மியன்மார், மொரீஸியஸ், பங்களாதேஸ் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளுக்கான நிதியுதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய இரண்டு நாடுகளும் முறையே 200 கோடி மற்றும் 400 கோடி ரூபாய்களை நிதியுதவியாக பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. (P)


Related Posts