Font size:
Print
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் உணரக்கூடிய விலையில் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். (P)
Related Posts