புதன் கிரகத்தில் வைரம்? சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தெரிகிறது.

அதீத வெப்பநிலை மற்றும்அழுத்தம் காரணமாக தரைப்பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறி இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதில் உள்ள கார்பன், சிலிக்கா, வைரம் உள்ளிட்டவை உருகிய நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஏராளமான வைரம் இருப்பதால் இதைத் தேடி மனிதர்கள் அங்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும், அவ்வளவு சுலபமாக அங்குள்ள வைரத்தைவெட்டி எடுக்க சாத்தியம் இல்லை. எனினும் புதன் கிரகத்தின் காந்தப்புலம் அல்லது புவியியல் கட்டமைப்புகள் குறித்து தெரிந்துகொள்ள இது உதவும் என கூறப்பட் டுள்ளது.

Related Posts