விவிஐபிக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு அறிவுறுத்தல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, விவிஐபிக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, ட்ரம்பின் கொலை முயற்சியை மேற்கோள் காட்டி, மத்திய அரசு மாநிலங்களை எச்சரித்துள்ளது.

அதிக ஆபத்துள்ள முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் இயக்குநர் ஜெனரல்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பேரணிகள், ரோடு ஷோக்கள் போன்ற பொது நிகழ்வுகளின் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறும், பாதுகாப்பின் அவசியத்தையும் இந்த உத்தரவு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

முதலில் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப கண்காணிப்புகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தற்காப்பு பயிற்சிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே முக்கியப் பிரமுகர்களின் அருகில் இருப்பதை உறுதி செய்தல். 

பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடக்கும் இடங்களை கண்டிப்பாக தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அருகிலேயே மருத்துவமனைகள் இருப்பதை உறுதி செய்தல், சுற்றுப்புறத்தை 360 டிகிரி பார்வையில் கண்காணிக்க வேண்டும். ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts