UPSC தேர்வு எழுதுவோருக்கு மாதம் ₹7,500 உதவித்தொகை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் UPSC தேர்வர்களுக்கு வழங்கப்படும் 7500 உதவித்தொகையை பெறுவதற்கான மதிப்பீட்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2 முதல் 17ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம் நடைபெறும் எனவும் செப்டம்பர் 9ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் ஆயிரம் பேருக்கு யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு 2025க்கு தயாராகும் வகையில் மாதம் 7500 ரூபாய் என பத்து மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.

தமிழர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது விருப்பம் | Thedipaar News

Related Posts