தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர் ப்ரியா ஆனந்த். தமிழ் படத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் போதுமான வரவேற்பு கிடைக்காவிடினும் கூட தொடர்ந்து தமிழில் முழு மூச்சாக கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். இவர் லியோ படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் அந்தகன் படத்தில் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு பிஸியாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரசாந்த் தமிழில் விட்ட இடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது. இந்த படம் சினிமா வட்டாரத்தை சார்ந்தவர்களுக்கே பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இதில் பிரியா ஆனந்தும் கலந்து கொண்டு வருகிறார்.
அவருக்கு பிடித்த ஹீரோ யார் என்றால், கன்னடாவில் புனித் ராஜ்குமார் என்றும், தமிழில் மிர்ச்சி சிவா என்றும் கூறியிருக்கிறார். இவர் புனித் ராஜ்குமார் கடைசி படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காசுக்காக வேறு வேலை எதுவும் பார்த்தீர்களா என்று கேட்ட கேள்விக்கு, காசுக்காகவே ஒரு படத்தில் நடித்தேன் என கூறியுள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்காக லோன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாராம் அதனால் கதை எதுவும் கேட்காமல் அந்த படத்தில் நடித்தேன் என்று ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.