பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷின் மாணவர் அமைப்பினர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி வரை காலக்கெடு விதித்திருந்தனர். 

 அதன்படி, இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

 ஷேக் ஹசீனாவின் அரசியல் போட்டியாளரான முஹம்மது யூனுஸ், மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் ஆகிய கருத்துக்களுக்கு முன்னோடியாக 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். மேலும் இராணுவ ஆட்சியில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. (P)

Related Posts