3 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம்: பற்றியெரியும் பிரிட்டன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரிட்டனின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த முகன்வா ருடகுபனா என்ற சிறுவன், கடந்த மாத இறுதியில் நடன வகுப்பில் இருந்த 10 சிறுமிகளை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக அந்த சிறுவன் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பிரிட்டனைச் சேர்ந்தவரல்ல என்றும் பல பொய்த் தகவல்கள் வதந்திகளாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, வலதுசாரி ஆதரவாளர்கள், அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்கள்மீதும், பள்ளிவாசல்கள்மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பிட்ட சமூக மக்களின் வணிகவளாகம் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை மீதும் தக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 375-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிவாசல்கள், முஸ்லிம் சமூக மக்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கலவரங்களைச் சமாளிக்க சிறப்பு காவல்துறையின் நிலையான ராணுவம் ஒருங்கிணைக்கப்படும். நாடு முழுவதும் வன்முறை நிகழ்வுகளை அரங்கேற்றியவர்கள் மீதான நடவடிக்கைக்கு நீதி அமைப்பு துரிதப்படுத்தப்படும். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொருவரும் சட்டத்துக்கு முன் கொண்டுவரப்படுவார்கள் என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். 

Related Posts