ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை. திரைப்பயணத்தில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். தான் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் முழுதாக தன்னுடைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பிசியாக இருந்தார். தற்போது சினிமாவில் கம்பேக் கொடுத்தாலும் தான் கொடுத்தார் அடேங்கப்பா வெறித்தனமாக நடித்து வருகிறார். வயதான நடிகை அப்படி என்றால் அக்கா, அம்மா கதாபாத்திரம் தானே கிடைக்கும்? என்ற நிலையை மாற்றி புரட்சிகரமான பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
அதிலும் தமிழை விட ஜோதிகா தற்போது நிறைய ஹிந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.அதோடு மலையாளத்தில் இவர் நடித்த காதல் தி கோர் படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுக்க, அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற ப்லீம்பேர் விருதையும் தட்டி சென்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த விருது விழாவில் கலந்துக்கொண்ட ஜோதிகாவின் ட்ரெஸ் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். எப்போதும் புடவையில் வரும் ஜோதிகா செம மார்டர் உடையில் வந்தது பலருக்கும் ஷாக் தான். அவரது உடை உள்ளாடை போலே இருப்பதால் ஜோதிகாவின் உடையை பலரும் இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். உண்மையை சொல்லப்போனால் ஜோதிகாவின் இந்த மாடர்ன் உடை அவரது ரசிகர்களை முகம் சுளிக்கவே வைத்துள்ளது.
GOAT படத்தின் கதை | Thedipaar News