வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா நாளை ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாய பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அந்தவகையில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபகாரரின் வீட்டில் இருந்து கொடிச்சீலை யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து ஆலய வெளிவீதி வலம்வந்து சுபநேரத்தில் கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. (P)

தமிழ் பொது வேட்பாளராக பா அரியநேத்திரன் | Thedipaar News

Related Posts