ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்தியர்கள் விடுவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஷ்ய ராணுவத்தில் 91 இந்தியர்கள் சேர்க்கப்பட்டிருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 8 பேர் உயிரிழந்துவிட்டனர். 14 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்த நிலையில், 69 பேர்ரஷ்ய ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக காத்திருக்கிறோம் என இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். 

ரஷ்ய ராணுவத்துக்கு சேவைசெய்வதற்காக இந்தியர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்படுவது தவறு. இந்தியர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதே இந்தகுழப்பத்துக்கு காரணம். வேறுவேலைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் ரஷ்யராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய ராணுவத் தில் பணிபுரியும் கடைசி இந்தியர் வெளியேறி தாய்நாடு திரும்பும் வரை மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என ஜெய்சங்கர் பேசினார்.

Related Posts