காஷ்மீரில் வேலை பார்த்து வந்த ராணுவ வீரர் ஒருவர் ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அப்போது எந்த காரணமும் இல்லாமல் அவரை காவல்துறையினர் அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் அவரது ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடித்து துன்புறுத்தி, ராணுவத் துறை குறித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொழில் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், காவல் நிலையத்துக்கு சென்று அங்குள்ள காவல் துறையினரை கண்டித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ராணுவ வீரர் ஒருவர் காவல் துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டது மருத்துவர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கொடூரமாக இப்படி நடந்து கொண்டது மிகவும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.