ரொறன்ரோவில் குரங்கம்மை தாக்கம் அதிகரிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

Mpox எனப்படும் குரங்கம்மை நோய் தாக்கம் ரொறன்ரோவில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குரங்கம்மை நோய் பரவுகையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்படுவோர் தடுப்பூசி எடுக்க வேண்டும் என ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் கூறியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 31-ம் திகதி வரையில் 93 பேர் குரங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 21 ஆக காணப்பட்டது. நகரம் முழுவதிலும் நோயாளர்கள் பதிவாகிய போதிலும் டவுன் டவுன் கோர் பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related Posts