வாகன இறக்குமதி குறித்து உயர்மட்ட தகவல் கசிந்தது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


தனியார் தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதிக்கான வரிகளை வருடாந்தம் திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால், வரிகள் அதிகரிக்கும் மற்றும் மதுபானத்திற்கு விதிக்கப்படும் கலால் வரி, வாகன இறக்குமதியிலும் விதிக்கப்படும், மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதத்தின் காரணிகளுக்கு ஏற்ப இந்த வரி திருத்தப்படும். எனினும் அத்தியாவசிய வாகனங்களை மாத்திரம் முதலில் இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படாத வகையில் 1000க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட சிறிய அளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. (P)

யாழில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது | Thedipaar News

Related Posts