துருக்கி நாடாளுமன்றத்தில் தாக்கிக் கொண்ட எம்பிக்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

துருக்கி நாட்டில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த விவாதத்தின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலின் போது இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காயமடைந்தனர். அதோடு, ஒரு பெண் உறுப்பினரும் தாக்கப்பட்டார். மோதல் வலுத்ததை அடுத்து சபாநாயகரின் மேடையில் ரத்தத் துளிகள் படிந்தன. இந்த சம்பவத்திற்கு பின்னர் சபாநாயகர் 3 மணிநேரம் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வீடியோ இணைப்பு: https://x.com/i/status/1824470813052920036

அஜித்திற்கு போன் போட்ட விஜய் | Thedipaar News

Related Posts