ரொறன்ரோவில் இளம் தலைமுறையினருக்கு அழுத்தம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னைய தலைமுறையினரை விடவும் தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Toronto Foundation charity என்ற அறக்கட்டளை அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வயது, இருபதுகளை கொண்ட இளம் தலைமுறையினர் தனிமையை உணர்வதாகவும் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவை சேர்ந்த 18 முதல் 29 வயது வரையிலானவர்களில் 45 வீதமானவர்களது உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டு வாடகை, அடகுக் கடன் போன்ற பல்வேறு பிரச்சனைகளினால் வாரத்தில் மூன்று நாட்கள் வரையில் தனிமையை அல்லது மன உளைச்சலை இவர்கள் எதிர்நோக்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

சிவகங்கை கப்பல் சேவை ஆரம்பம் | Thedipaar News

Related Posts