நாமலுடன் கைகுலுக்கியது ஏன்;பதிலளித்தார் அநுர

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேர்தல் செயலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இன்று இது ஒரு சாதாரண அரசியல் சம்பவம் எனவும், கைகுலுக்கலைத் தவிர்ப்பதைக் காட்டிலும் இது சரியானது எனவும் தெரிவித்தார்.

ராஜபக்ஷவுடனான உரையாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தாங்கள் விசேடமாக எதுவும் கலந்துரையாடவில்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

"நான் தான் 'மல்லி (தம்பி) எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். நான் விரும்பினால், அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் நாட்டின் பொது நிதியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதை அவரது முகத்திற்கு நேராக கூற முடியும், அல்லது நாகரிகமாக கையைக் குலுக்கி விட்டு வரமுடியும். கைகுலுக்குவதற்கும் எங்கள் கொள்கைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. அது வெறும் அரசியல் நிகழ்வு தான் ”என்று அவர் கூறினார்.

ஒருவர் கைகுலுக்கினால் எழுந்து நின்று ஏற்றுக்கொள்வது சாதாரண மனித குணம் என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதியின் கைகுலுக்கலை மறுத்த சம்பவத்தை மக்கள் எவ்வாறு விமர்சிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறீர்கள். அவர் எவ்வளவு கர்வமாக இருந்தார். அப்போது நாங்கள் செய்தது சரிதான். கைகுலுக்கலை மறுப்பது தான் தவறு" என்று அவர் கூறினார். (P)


Related Posts