மருத்துவமனையில் அட்மிட் ஆன அஜித் மனைவி! நலமா? என்னவாயிற்று?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, தனது ரசிகர்களுக்கு எல்லா விஷயத்திலும் ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர். ரசிகர் மன்றம் வேண்டாம் என தனது ரசிகர் மன்றத்தை கலைத்து தமிழ்நாட்டில் சினிமா உலகில் ஒரு மாற்றம் செய்தவர். இதனாலே பலர்க்கும் அஜித் பிடித்தமானவராக மாறிவிட்டார். அரசியல் வேண்டாம், ஊடக பேட்டி வேண்டாம், அவரவர் குடும்பத்தை பாருங்க அதுவே எனக்கு ரசிகர்களாகிய நீங்க செய்யும் கைம்மாறு என கூறியவர். இவர் படங்கள் ரிலீஸ் என்றால் பெரிய திருவிழா போல தமிழ்நாடே கொண்டாடும். இந்தநிலையில் .கடந்த ஜுலை மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஷாலினி சென்னையில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு வந்த தனது கணவருடன் புகைப்படம் ஏடுத்து பதிவிட்டவர், 

பின் வீட்டிற்கு வந்ததும் ஓய்வில் இருந்தபோது தனது மகன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். எதனால் மருத்துவமனை சென்றார் என்னவாயிற்று என்பதெல்லாம் இன்னும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவர் குறித்து எந்த ஒரு போட்டோவும் வெளிவராத நிலையில் தனது தங்கையுடன் சேர்ந்து வரலட்சுமி பூஜை செய்துள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷாலினி பதிவிட ரசிகர்கள் அவர் குணமாகிவிட்டார் என போட்டோவிற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

Related Posts