’கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை’

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண  அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று  நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதம் அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்டதை போன்று 15 வீத வட்டியை  சேமிப்பு வட்டி வீதமாக வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். 15 வீத வட்டியுடன் கூடிய  இலட்சக்கணக்கான  ஓய்வூதியதாரர்களின் உரிமை இன்று  பறிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள்  ஏமாற்றப்பட்டாலும் தாம் அவர்களை  ஏமாற்றப் போவதில்லை. 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற  அனைவருக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்போம் என்று கட்சித் தலைவர்  தெரிவித்தார். 

2016 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த சலுகையை  கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் ஆக்கி உள்ளார். அதனை மீண்டும் வழங்குவோம்.   ஓய்வு பெற்றவர்களின் சலுகைகளை உயர்ந்த தரத்தில் பேணும் பொருட்டு, 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதன் மூலம் புதியதொரு சட்ட மூலமொன்று கொண்டு வரப்படும். சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்படுகின்ற 3000 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக  அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பன்னிரெண்டாவது மக்கள் பேரணி  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (24) காலை கண்டி  திகன பிரதேசத்தில் மிக வெற்றிகரமாக  முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது  எதிர்க்கட்சித் தலைவர்  இவ்வாறு தெரிவித்தார். 

அத்தோடு இராணுவ வீரர்களுக்காக One rank one pay வேலை திட்டத்தையும் முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில்  ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டு  பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்  இதன்போது தெரிவித்தார். இவை பொய்யான வாக்குறுதிகள் அல்ல இது முன்மொழிவும்  திட்டங்களும் ஆகும்.  பிரேமதாசாக்கள்  செய்வதாகச் சொன்ன விடயங்களை  செய்யாமல் இருந்ததில்லை. எனது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின்  நாமத்தால் நான் சொல்வதை செய்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். (P)

இளம் தாய் சிந்துஜாவின் கணவர் மரணம் | Thedipaar News

Related Posts