வவுனியா - மன்னார் வீதி விபத்து: இளைஞர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிளும் பூவரசங்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமனாத் சிவாகரன் (வயது 30) என்ற இளைஞரே  உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னர்.  (P)

வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பேரணி | Thedipaar News

Related Posts