மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட சிறுவர்களுக்கான புதிய சிகிச்சை பிரிவு கட்டிடம் செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க 150 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் திட்ட முகாமைத்துவம் மற்றும் நிர்மாண பிரிவின் கீழ் 10 மாதங்களில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்கள் சிலரின் பங்கேற்பில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரமேஷ் அருண ஜயசேகர உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். (P)


Related Posts