வாக்களார் அட்டை கிடைக்காவிட்டால்...

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print



ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் சுமார் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் ஒரு கோடியே 32 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

நாளையும் நாளை மறுதினமும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்களில் வாக்களார் அட்டை கிடைக்காவிட்டால் அதனை தபால் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற முடியும். தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் தினம் வரை இந்த சந்தர்ப்பம் வாக்காளர்களுக்கு உள்ளது. இதுவரை சுமார் 10 மில்லியன் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. (P)


28 வயதுடைய ஆட்டோ சாரதி கைது | Thedipaar News

Related Posts