மூன்றாவது முறையாகவும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போல எவரும் 50 வீதம் மற்றும் வாக்கினை பெறாததால் 2ஆவது வாக்கெண்ணும் நடைமுறைக்கு செல்வதென தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் சட்டத்தின் கீழ் தீர்மானித்திருக்கின்றார்.

அந்த வகையில் 39 வீதம் பெற்ற அனுரகுமாரவும் 34 வீதம் பெற்ற சஜித் பிரேமதாசவும் போட்டியில் தொடர்ந்து நிலைத்திருப்பர்.

ஏனைய 36 வேட்பாளர்களும் தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவராகக் கருதப்படுகிறார். இது இவர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு தோல்விடைகின்ற 3ஆவது சந்தர்ப்பமாகும்.

போட்டியில் தொடர்ந்து இருக்கின்ற சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்க இருவருக்குமிடையில் நடைபெறும் விருப்பு வாக்கு இடையில்  விருப்பு வாக்குகளை எண்ணியதன் பின்  இருவரில் அதிக வாக்குகளை பெறும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவர். (P)


Related Posts