விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐரோப்பிய நாடான நார்வேயின் ஓஷ்லோவில் இருந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாலகாவுக்கு, ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் என்ற பயணியர் விமானம் நேற்று சென்றது. நடுவானில் பயணியருக்கு உணவு வழங்கப்பட்டது.

அதில் ஒரு பெண் பயணிக்கு வழங்கப்பட்ட உணவு பாக்சில் இருந்து திடீரென வெளியேறிய எலி, விமானத்திற்குள் குதித்தது. இதனால், பயணியர் அதிர்ச்சியடைந்தனர்; உணவை சாப்பிட மறுத்தனர்.

தப்பிய எலியை தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். பின்னர், அனைத்து பயணியரும் வேறு விமானத்தில் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், உணவில் எலி கிடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், இதுபோன்ற நிகழ்வு இனி நிகழாது எனவும் உறுதி கூறியுள்ளது. பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி வந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

Related Posts