பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! எல்லை மீறும் மாணவர்களுக்காக

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து போலியாக கணக்கு காட்டியதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மதிய உணவு வேளையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனவும் மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts