2ம் வகுப்பு குழந்தையை நரபலி கொடுத்த ஆசிரியர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி, தங்கள் பள்ளிக்கு பெரியளவில் பெயரும் புகழும் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி 2ம் வகுப்பு குழந்தையை நரபலி கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அப்பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகல், அவரது தந்தை ஜஷோதன் சிங், 3 ஆசிரியர்கள் இணைந்து தங்கள் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 2ம் வகுப்பு படிக்கும் குழந்தையை கொலை செய்துள்ளனர்.

இவர்களில் ஜஷோதன் என்பவர்தான், இச்சம்பவம் நடப்பதற்கு முக்கிய காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ஜஷோதன் பில்லி சூனியத்தில் கொண்ட நம்பிக்கையால் தன் மகனும் பள்ளியின் இயக்குநருமான தினேஷை இக்கொடூர செயலுக்கு சம்மதிக்க வைத்து இச்செயலில் ஈடுபடுத்தியுள்ளார் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இப்பள்ளியில் 600 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தை, டெல்லியின் ஐ.டி. ஊழியராக இருந்திருக்கிறார். கடந்த திங்களன்று விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்கள், இம்மாணவர் நினைவற்று இருப்பதை கண்ட நிலையில், நிர்வாகத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.  குழந்தையின் உடலுடன் அந்த பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பல மணி நேரமாக காரில் பயணித்துக்கொண்டிருந்தது பின்னாட்களில் விசாரணையில்தான் தெரியவந்துள்ளது. வெகுநேரமாக குழந்தை எங்கே என்றே தெரியாமல் தவித்த அந்த தந்தை, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், விசாரணை தொடர்ந்தபோது, பள்ளிக்கு பெயரளவில் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக நரபலி கொடுத்தது குறித்து தெரியவந்துள்ளது.

அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க தடை | Thedipaar News

Related Posts