திடீரென அடிவயிற்றில் வீக்கம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சினிமாவில் முன்னணி நடிகராக 73 வயதை எட்டியும் தற்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தான் இந்த வயதிலும் எந்த மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்ளாமல் உள்ளேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெள்ளையாக உள்ள எந்த பொருளையும் தான் எடுத்துக்கொள்வதில்லை என கூறி இருந்தார். இது பலருக்கும் விழிப்புணர்வாக இருந்தது. ஏனெனில் ரஜினியின் சுறுசுறுப்பிற்கும் உடல் நலத்திற்கும் இது தான் காரணமா? என பலரும் இதை பின்பற்றினார்கள். வெள்ளையாக உள்ள சர்க்கரை போன்ற உணவுகளை தவிர்த்தால் வெள்ளையாக உள்ள மாத்திரைகளையும் தவிர்க்கலாம். ஆனால் அவ்வளவு ஆரோக்கியமான மனிதரே இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

 நேற்று அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார் என தகவல் வெளியானது. ரஜினிகாந்தின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு அடிவயிற்றில் ஸ்டெண்ட் பொறுத்தப்பட்டு, ஆஞ்சியோ சி*கிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் ஐசியூ-வில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரத்திற்கு ரஜினிகாந்த் ஐசியூ பிரிவில் இருப்பார் எனவும், அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் படம் வரும் 10 - ம் தேதி வெளிவர உள்ளது. அதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பே இதற்காக மருத்துவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை செய்து, அதன்பின்தான் பரிசோதனைக்கு முடிவு செய்துள்ளார்களாம்.

Related Posts