சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு அழகான தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. இதன் மூலம் தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஒவ்வொரு சாகச நிகழ்ச்சிக்கும் அழகான தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. இதன்படி, சங்கம், சேரன், சோழன், பல்லவர், காவேரி,காஞ்சி, நட்ராஜ் ஆகிய தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன.
சாகச நிகழ்ச்சியை சென்னையை சேர்ந்த விமானப் படை அதிகாரி கார்த்திக் தனது மனைவியுடன் தூய தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர்களது வர்ணனை பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.
கூடவே, தமிழ் திரைப்பட பாடல்களும் ஒலிக்க மக்கள் உற்சாகத்தில் மிதந்தனர். அதேபோல், சாரங் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
தேஜஸ், ரஃபேல் போர் விமானங்கள் தீப்பிழம்புகளை கக்கியபடி வானில் சாகசத்தில் ஈடுபட்டது தீபாவளி பண்டிகையை முன்கூட்டியே கொண்டாடியது போன்று பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
சூர்யகிரண் குழுவினர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போது விமானிகள் தங்களது காக்பிட்டில் இருந்து நன்றி, மீண்டும் சந்திப்போம் எனதமிழில் கூறி விடை பெற்றனர். அதேபோல், டார்னியர் விமானத்தில் இருந்த விமானி தமிழில் பேசியதும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் | Thedipaar News