பிராம்டன் ஹோட்டல் வேலைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட்டது. இதையடுத்து 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வேலைக்காக உணவு விடுதி முன் குவிந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்திய இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வலைதளங்களில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. “கனடாவில் வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. 

வேலைவாய்ப்புக்காக கனடா செல்ல இருக்கும் இந்திய இளைஞர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளனர். இந்தக் கருத்தை சிலர் மறுத்துள்ளனர். “வெளிநாடுகளில் படிக்கும் இளைஞர்கள் தங்கள் செலவுக்காக பகுதி நேரமாக உணவு விடுதிகளில் வேலைக்குச் செல்வது வழக்கமான ஒன்று”என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கனடாவில் வேலைவாய்ப்புச் சூழல் மாறிவருவதையே இது காட்டுகிறது. இந்திய இளைஞர்கள் கனடாவில் வேலை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவது நிதர்சனம்” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts