தப்புமா புளோரிடா? மணிக்கு 260 கிமீ வேகத்தில் மிரட்டும் புயல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மில்டன் புயல் புளோரிடா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதாவது, மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சக்தி வாய்ந்த புயலாக உருவாகி புளோரிடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. 

இந்த புயலுக்கு மில்டன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் புளோரிடாவிலிருந்து மக்கள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, புளோரிடாவில் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த புயல் காரணமாக அதிவேக சூறாவளிக்காற்று வீசுவதுடன், கடும் மழைப்பொழிவும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் காரணமாக அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் புயல் கரையைக் கடக்கும்போது சற்று வலுவிழந்து ஆபத்து பிரிவில் 4-ஆம் நிலை புயலாக கரையைக் கடந்தாலும் காற்றின் வேகம் மணிக்கு 233 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், டாம்பா வளைகுடா பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று அமெரிக்க தேசிய புயல் மையம் எச்சரித்துள்ளது.

டாம்பா நகரில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என்றும் என்.ஹெச்.சி எச்சரித்துள்ளது. இதன்காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts