ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானுக்கு சென்றிருந்த போது இஸ்ரேல் தாக்கியதில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். தொடர்ந்து, கடந்த செப். 21-ம் தேதி யாஹ்யா சின்வாரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது. 

இராணுவ உளவுத்துறையைப் பின் தொடர்ந்து, சின்வார் இறந்ததற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

Related Posts