நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை 16 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 158, 391 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 9, 663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)