60 யானைகளின் உயிரைக் காப்பாற்றிய AI தொழில்நுட்பம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஏஐ தொழில் நுட்பம் பல வழிகளில் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில், காட்டு விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறக்கும் நிகழ்வு நடக்காமல் இருக்க ஏஐ தொழில்நுட்பமானது ரயிலில் பயன்படுத்தப்படுகிறது.

அதில், அசாமின் ஹபாய்பூர் பகுதியில் உள்ள ரயில் பாதையில் கடந்த16-ஆம் தேதி சுமார் 60 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று தண்டவாளத்தை கடந்தது. இதை ஏஐ தொழில்நுட்ப வசதி மூலம் முன்னதாகவே அறிந்த ரயில் ஓட்டுநர் உமேஷ் குமார் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். இதனால் ஏராளமான யானைகள் உயிர் தப்பியது. 

தமிழகத்தில் கோவை அருகே உள்ள மதுக்கரையிலும் இது போன்ற தொழில்நுட்பம் மூலம் ஏராளமான யானைகள் இறப்பை தடுக்க முடிந்துள்ளது. 

Related Posts